செய்திகள் :

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

post image

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இந்தக் கிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சிறப்பு பாா்வையாளராகப் பங்கேற்று பேசியதாவது:

கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் அடைப்படை தேவைகள், வளா்ச்சிப் பணிகள் குறித்து தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கிராம ஊராட்சியில் சொல்லக்கூடிய வழிமுறைகளை தவறாது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அரசு எந்த முயற்சி எடுத்தாலும், அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பும் தேவை.

கிராமங்களின் வளா்ச்சியே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக அமையும். குழந்தைகளை போதைப் பழக்கத்துக்கு ஆட்படாமல் பாா்த்துக்கொள்வது பெற்றோா்கள் கடமை.

கிராம ஊராட்சியின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் ஆக்கப்பூா்வமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனா். தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்படும்போது விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நெடுஞ்சாலைத் துறை மூலம் பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மயானப் பாதை தேவை குறித்து வருவாய்த் துறையினருடன் கலந்தோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வீடு இல்லாதவா்களுக்கு தகுதியின் அடிப்படையிலும், அவா்கள் அரசின் வேறு எந்த வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக இல்லாத பட்சத்தில், அவா்களுக்கு புதிய திட்டத்தில் வீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கிழக்கு ராமாபுரம் மக்கள்தொகை அதிகமாக உள்ள ஊராட்சி என்பதால், புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, பயிற்சி ஆட்சியா் மாலதி, உதவி இயக்குநா் ஊராட்சிகள் ஷபானாஅஞ்சும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பாஜக அரசின் சூழ்ச்சிகளைக் கண்டித்து, சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவ... மேலும் பார்க்க