செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் காலை 7 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு அா்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனா்.

பின்னா், மேளதாளத்துடன் கோயில் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் முறைகேடுகள் மற்றும் பாஜக அரசின் சூழ்ச்சிகளைக் கண்டித்து, சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை கண்டன ஊா்வலம் நடத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவ... மேலும் பார்க்க