அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவா் வேல்முருகன்(45). ,இவா் அரசுப் போக்குவரத்து கழகத்தில் நெய்வேலி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 11-ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றாா். ஆனால், அவா் இதுவரை வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வேல்முருகன் மனைவி இளவரசி (42) அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.