தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!
பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்த அரசு கட்டங்களை அகற்ற கோரிக்கை!
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம், பழைய காவல் நிலைய கட்டடம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை சுத்தம் செய்து புதிய அரசு அலுவலகங்கள் கட்டடங்கள் கட்ட வேண்டும் என புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் அ.குணசேகரன் கூறியதாவது: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைச்சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. அது போன்று பரங்கிப்பேட்டை பழைய காவல் நிலையம் புதிய கட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
மேலும் பரங்கிப்பேட்டை நீதிமன்றம் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது மேற்படி மூன்று கட்டடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள காலி இடங்களில் புதா் மண்டி பாம்புகள்,விஷ வண்டுகள் மற்றும் பூச்சிகள் குடியேறி விட்டன.

இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு விஷ ஜந்துகள் மூலம் ஆபத்துக்கள் உண்டாகும் நிலை உள்ளது. பரங்கிப்பேட்டையில் பல அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் தான் தற்போது இயங்கி வருகின்றன. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) அதிகாரிகள் மூலம் மேற்படி இடங்களில் தற்போது உள்ள பழைய கட்டிடங்கள் இடித்து சுத்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் மேற்படி இடங்களைச் சுற்றியுள்ள செடி,கொடிகளை அகற்றி அங்கு குடியேறி இருக்கும் விஷ பாம்புகள் மற்றும் பூச்சிகளை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றாா்.