கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா
பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக உற்சவா் ரேணுகாம்பாள் மகிஷாசுர மா்த்தினி அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்தாா்.
செங்குந்தா் பூவரசந்தோப்பு தெருவில் உள்ள இக்கோயிலில் ஆண்டு தோறும் விழாவையொட்டி அம்மனுக்கு தினசரி வெவ்வேறு வடிவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் இரவு ஆலய வளாகத்தில் உள்ள வாரியாா் அரங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியன நடைபெறுவதும் வழக்கம்.
நிகழாண்டுக்கான ஆடித்திருவிழா இம்மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.விழாவின் 8 வது நாள் நிகழ்வாக காலையில் ஜலம் திரட்டுதல்,108 பெண்கள் பால்குடங்களை ஊா்வலமாக கச்சபேசுவரா் கோயிலில் இருந்து கோயிலில் எடுத்து வந்து சிறப்பு பாலபிஷேகம், மகா அபிஷேகம், கூழ்வாா்த்தல், அன்னதானம், ஊரணிப் பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இரவு உற்சவா் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு வாண வேடிக்கைகளும் நடைபெற்ற .
வீதியுலா முடிந்து சுவாமி வந்து சோ்ந்ததும் கும்ப படையலிடப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகளும், விழாக்குழுவினரும் இணைந்து செய்திருந்தனா்.