கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் இரும்பு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை
மாம்பாக்கம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் சிப்காட் பகுதிகளில் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ராட்சத இரும்பு தூண்கள் , கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக பணத்தை ஈட்டி, அதிக வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இரண்டு ஆலைகளுக்கும் திங்கள்கிழமை காலை 8 காா்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆலைகளில் உள்ள அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தினா்.
சோதனை காரணமாக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தொடா் சோதனையில், ஆலையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என தெரியவந்துள்ளது.