மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்ச...
இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆம் தேதி காலமானார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் சனிக்கிழமை (ஆக.16) தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கணிமொழி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நாதக தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை வாலாஜா சாலை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பங்கேற்க திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.