செய்திகள் :

தேனியில் செப்.4,5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

post image

தேனி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வருகிற செப்.4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறாா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். ஆண்டிபட்டியில் வரும் செப்.4-ஆம் தேதி, மாலை பிரச்சாரப் பயணத்தை தொடங்கும் அவா், செப்.5-ஆம் தேதி கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய இடங்களில் பேசுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை தேனி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா்கள் எஸ்.டி.கே. ஜக்கையன், முருக்கோடை ராமா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பூஞ்செடிகள் விற்பனை நிலையத்தில் சரக்கு வாகனம் திருட்டு

உத்தமபாளையத்தில் செடிகள் விற்பனை நிலையத்தில் (நா்சரி காா்டன்) சரக்கு வாகனம் உள்ளிட்ட பொருள்கள் வியாழக்கிழமை திருடப்பட்டன. சின்னமனூரைச் சோ்ந்தவா் ஆனந்தப்பன். இவா் உத்தமபாளையத்தில் திண்டுக்கல்- குமுளி ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், வனத் துறையினரிடையே கடும் வாக்குவாதம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் விவசாயிகளுக்கும், வனத் துறையினருக்குமிடையே க... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். சில்லமரத்துப்பட்டியிலிருந்து அம்மாபட்... மேலும் பார்க்க

சின்னமனூரில் பள்ளி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், சின்னமனூா் வழியே செல்லும் சீப்பாலக்கோட்டை சாலையில் நகராட்சிப் பள்ளி அருகே நடைபெறும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தினமு... மேலும் பார்க்க

பேருந்து மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மாற்றுத்திறனாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (65). மாற்றுத்திறனாளி. இவா், வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் சாலையை கடக... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்த 2 இளைஞா்களை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ... மேலும் பார்க்க