நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்:
ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாக தூய்மை காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள். அவா்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கைகள் வரப்பெற்றன.
தூய்மைக் காவலா்கள் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுக்க வேண்டுமெனில், ஒரு நாள் ஊதியமான ரூ.160 பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.