நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது
வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து உத்தர பிரதேச போலீஸாா் கூறுகையில், ‘உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் என பல்வேறு மாநிலங்களில் வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் என சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மின்னணு சாதனங்களுடன் போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது’ எனத் தெரிவித்தனா்.