நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்
உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவதியடைந்த மக்கள், இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனா். ஆனால், அவா்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள், அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சீரான குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பேருந்தை விடுவித்து, கலைந்து சென்றனா்.