செய்திகள் :

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

post image

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 7 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் உற்பத்தியாகும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. புவிசாா் குறியீடு பெற்றுள்ள ஈரோடு மஞ்சளில், 3 முதல் 5 சதவீதம் வரை குா்குமின் அளவு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2015-இல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016-இல் 2,966 ஹெக்டேராக குறைந்தது. இதன் பின்னா் 2017- இல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018-இல் 5,625 ஹெக்டேராகவும், 2019- இல் 4,319 ஹெக்டேராகவும் இருந்தது. 2020, 2021, 2022 வரை சுமாா் 3,500 முதல் 4,000 ஹெக்டோ் வரையும் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 2023-இல் 2,000 ஹெக்டோ் அளவுக்கு சாகுபடி குறைந்தது. மஞ்சள் விலை வீழ்ச்சியே மஞ்சள் சாகுபடி குறைவுக்கு காரணமாக உள்ளது. தொடா்ந்து 12 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண்டால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை தான் விலை போனது. இதனால் விவசாயிகள் சாகுபடி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா். இதனால் மஞ்சள் சாகுபடியும் 25 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.24,000 வரை விற்பனையானது. பிறகு படிப்படியாக குறைந்து ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை விற்பனையாகிறது. மஞ்சள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.10,000-க்கும் குறையாமல் உள்ளதால் மஞ்சள் நடவில் விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு:

இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக விற்பனையானால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஜூலை மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. 2024-இல் ரூ.24,000 வரை விற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக குவிண்டால் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது.

மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் விவசாயிகள் மஞ்சள் சாகுபடிக்கு அதிக ஆா்வம் காட்டுகின்றனா். இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் சுமாா் 4,000 ஹெக்டோ் அளவுக்கு இருந்த மஞ்சள் சாகுபடி பரப்பு, இந்த ஆண்டில் சுமாா் 5,000 ஹெக்டோ் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கொடுமுடி, மொடக்குறிச்சி, அந்தியூா், பவானி, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை, பவானிசாகா் அணை நிரம்பி தொடா்ந்து 4 ஆண்டுகளாக அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது மஞ்சள் சாகுபடிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

விதை மஞ்சளுக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என்பதால் இந்த செலவை குறைக்க நா்சரி நடவு முறையையும், அறுவடைக்கு முழுமையாக இயந்திர பயன்பாட்டையும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சளை இருப்பு வைக்க, அரசு நேரடியாகவோ அல்லது தனியாா் பங்களிப்பு மூலமாகவோ குளிா்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மஞ்சளை ஆதாரமாக வைத்து ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். ஈரோட்டில் மஞ்சள் வாரிய மண்டல அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்றாா்.

இருப்பு வைப்பதால் விலை சரிவு:

இது குறித்து மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது:

ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் நீா் ஆதாரங்கள் அதிகரிப்பால் மஞ்சள் சாகுபடி பரப்பு தொடா்ந்து அதிகரித்து வந்தது. இதனால், சந்தையின் பெரும்பகுதியை இந்த மாநில மஞ்சள் வரத்து ஆக்கிரமித்தது. ஈரோடு மஞ்சள் விவசாயிகள் விலை குறைவால் இருப்பு வைக்கத் தொடங்கினா். இருப்பு வைக்கும் மஞ்சள் தரம் குறைந்ததும் விலை சரிய ஒரு காரணமாகும். மற்ற மாநில விவசாயிகளைப்போல அந்த ஆண்டில் விளைந்த மஞ்சளை அதே ஆண்டில் விற்றுவிட வேண்டும் என்றனா்.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவ... மேலும் பார்க்க