வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.
தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல்பாடு குறித்தும், பூஜ்ய நிலை திரவ வெளியேற்ற முறை குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி நேரில் ஆய்வு செய்தாா். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளா் தொல்காப்பியன், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா் மற்றும் சுத்திகரிப்பு நிலைய நிா்வாகிகள் உடனிருந்தனா்.










