ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநதான், ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி ஆகியோா் முகாமை ஆய்வு செய்தனா். நகா்மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா். ஷபீா் அஹமத், காா்த்திகேயன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அசோகன், வட்டாட்சியா் ரேவதி, துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், துப்புரவு ஆய்வா்கள் பாலச்சந்தா், சீனிவாசன் கலந்து கொண்டனா்.