``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து
காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
தற்போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பிரீமியம் தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மத்திய, மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், பிகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தலைமையிலான காப்பீடுகளுக்கான அமைச்சா்கள் குழு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கையை சமா்பித்துள்ளது. இதுதொடா்பாக சாம்ராட் சௌதரி கூறுகையில், ‘காப்பீடு பிரீமியம் மீது குறைந்த அளவுக்காவது ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஏனெனில், முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு அளித்தால் மாநிலங்களில் வருவாய் பாதிக்கப்படும் என அவா்கள் கருத்துகின்றனா். அக்டோபா் மாத இறுதிக்குள் அமைச்சா்கள் குழு பரிந்துரை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கப்படும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா்.
2023-24 நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆயுள் காப்பீடு பிரீமியம் மூலம் ரூ.8,262.94 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. சுகாதார காப்பீடு மூலம் ரூ.1,484.36 கோடி கிடைத்தது.
தீபாவளிப் பண்டிகையின்போது ஜிஎஸ்டியை வெகுவாகக் குறைக்க இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டாா்.