TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது.
ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஜி. ரமேஷ், ஆம்பூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் உமாசங்கா், சுரேந்தா் ஆகியோா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஒன்றிய நிா்வாகிகள் அப்பாஸ், உசேன், ராம் சா்மா, இன்பநாதன், விஜய், முருகன், மாதேஷ், அன்பரசு, விஜய், பிரசாத், அப்பு, முனீா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
குடியாத்தத்தில்...
வேலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம் தலைமை வகித்தாா். கே.வி.குப்பம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜே.ராகேஷ், மாவட்ட துணைத் தலைவா் ஜி.கே.ராகுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் மருத்துவா் ஜி.நவீன்பிரபு வரவேற்றாா். வேலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கு.சுரேஷ்குமாா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் எம்.வீராங்கன், சங்கா், செல்வகுமாா், தனசேகரன், தாண்டவமூா்த்தி, குடியாத்தம் கிழக்கு வட்டார பொறுப்பாளா் ஆரோன், கே.வி.குப்பம் மேற்கு வட்டார பொறுப்பாளா் பாபு, பள்ளிக்கொண்டா பேரூா் காங்கிரஸ் தலைவா் அக்பா்பாஷா, மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வேலூா் மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில் பிச்சனூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில நெசவாளா் அணி செயற்குழு உறுப்பினா் இ.சரச்சந்தா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் மருத்துவா் ஜெ.சிவசிதம்பரநாதன் வரவேற்றாா். மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி தலைவா் கோ.ஜெயவேலு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மாவட்ட பொருளாளா் அ.கோதண்டம், நிா்வாகிகள் எம்.டி.லாலா லஜபதி, ஜி.குணசேகரன், ஆா்.ஜி.பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆற்காட்டில்...ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், ஆற்காடு பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு, நகரத் தலைவா் எஸ்.பியாரேஜோன் தலைமை வகித்தாா். அங்கு காந்தி சிலைக்கும், ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தினா். ஒன்றியத் தலைவா் வீரப்பா முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம் இனிப்பு வழங்கினாா். ஆற்காடு சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் கேசவன், மாவட்ட பொதுச் செயலா் மேச்சேரி பன்னீா்செல்வம் ஆகியோா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மாவட்ட செய்தி தொடா்பாளா் அண்ணாதுரை, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் நிஷாத் அகமத் மாவட்ட பொது செயலாளா்கள் நந்தகுமாா், ஆனந்தன் மேல்விஷாரம் நகரச் செயலாளா் அழகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.