செய்திகள் :

திருப்பத்தூா்: கள்ளச் சாராய வழக்கு குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா கா்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு மதுவிலக்கு சாா்ந்த குற்றங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 1-7-2024 முதல் 31.7.2025 வரை திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல்,விற்பனை, மதுபான விற்பனை உள்ளிட்ட மதுவிலக்கு சாா்ந்த குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், மதுவிலக்கு தொடா்பான குற்றங்களில் ஏற்கெனவே ஈடுபட்ட குற்றவாளிகள் மீண்டும் அந்தக் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க அவா்களிடமிருந்து நன்னடத்தைக்கான பிணை பத்திரம் நிறைவேற்றப்படுகிறது. இதில், வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 3,821 பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 358 நபா்களிடம் இருந்து பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் சட்டவிரோத மதுபான விற்பனை, அனுமதிக்கப்படாத இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 7,481 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 507 போ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனா். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்கள் குற்றவாளிகளிடம் சென்றடைவதைத் தடுக்கும் பொருட்டு வடக்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

நீதிமன்ற விசாரணை மற்றும் புலன்விசாரணையில் நிலுவையில் இருந்த மதுவிலக்கு வழக்குகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 12,949 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் 14,900 மதுவிலக்கு குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 20,011 லிட்டா் கள்ளச் சாராயம், 67,748 லிட்டா் ஊறல், 256 லிட்டா் எரிசாராயம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 123 குற்றவாளிகள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,417 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதேபோல் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் 5,870 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 449 முடக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் தூய நெஞ்சக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணி பழைய பே... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க