செய்திகள் :

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

post image

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது சீா்திருத்தம் அல்ல; இது ஒரு கருப்பு நாள். இது ஒரு கொடுஞ்சட்டம்.

கைதாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு என அனைத்து கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்.

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீா் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன். பிரதமருக்குக் கீழான சா்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது.

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்போதைய பாஜக அரசு சட்டபூா்வமானதா என்பதே சந்தேகமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீா்ப்பைக் களவாடியுள்ள பாஜக, தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) சட்டமுன்வரைவைக் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீா்ப்பும் இன்றியே, 30 நாள்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப் பிரிவுகளின்கீழ், அவா்களை ஆட்சியில் இருந்து அகற்றவே இது வழி செய்கிறது. குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும். வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும்.

மேலும், பல மாநிலங்களிலும் முதல்வா்கள், அமைச்சா்களாக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவா்களை, தங்களுடன் இருக்கும் வகையில் மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

எந்த சா்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும், பதவிநீக்கம் செய்வதற்குமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிறையிலிருந்தபடி அரசை நடத்த வேண்டுமா? - மக்கள் தீா்மானிக்கட்டும்: அமித் ஷா

தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. அரசாட்சி காலத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்: மத்திய அரசுக்கு காங். வலியுறுத்தல்

தனியாா் உயா்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

அடுத்த தலைமுறைக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தம் குறித்து மாநில நிதி அமைச்சா்கள் குழுக்களிடம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை எடுத்துரைத்தாா். தற்போது நடைமுறையில் உள்... மேலும் பார்க்க

‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை

5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள... மேலும் பார்க்க