திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல...
வறுமையால் கொடுமை! திருமண வயதான இரு மகள்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூரில் தனது இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் பட்டம்புதூர் அருகே ரயிலில் அடிபட்ட மனித உடல்கள் சிதறிக் கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் புதன்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கைப்பற்றி, மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் பட்டம்புதூர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தர்மரின் மனைவி ராஜவள்ளி (60), அவரது மகள்கள் மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) என்பது தெரியவந்தது.
அண்மைக்காலமாக சிறுநீரக பாதிப்புக்குள்ளாகியிருந்த ராஜவள்ளி, குடும்ப வறுமையைக் கண்டு வருந்தி வந்ததாகவும், வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான தனது இரு மகள்களுக்கும் தன்னால் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியிலும், இரு மகள்களுடன் ராஜவள்ளி செவ்வாய்க்கிழமை மாலை திருவனந்தபுரம் - திருச்சி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
[தற்கொலை தவறு - தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.]