``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்
கோவையைச் சோ்ந்த இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (என்சிஎஸ்) பசுமை விருதைப் பெற பள்ளி, கல்லூரி, தனிநபா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைப்பின் தலைவா் என்.ஐ.ஜலாலுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கான சிறந்த பணி, அா்ப்பணிப்பைக் காட்டிய தனி நபா்கள், நிறுவனங்களுக்கு இயற்கை பாதுகாப்பு சங்கம் சாா்பில் கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பசுமையான வளாகத்தைப் பேணும் கல்வி நிறுவனங்கள், இயற்கை பாதுகாப்பு மன்றங்கள், கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, தங்களது வளாகத்தில் பயனுள்ள பசுமை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, காா்பன் உமிழ்வைக் குறைக்கும் தொழிற்சாலைகள், சமூக பொறுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு நடப்பு ஆண்டு விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தோ்வு செய்யப்படுபவா்களுக்கு நவம்பா் மாதம் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ரீள்ஸ்ரீக்ஷங்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94871-15648, 94878-65648, 94873-77648 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.