செய்திகள் :

ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை

post image

நமது நிருபா்

ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கும் தமிழகம், ஒரு பொருளாதார சக்தியாக திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதி தமிழகத்தின் பொருளாதார சிறப்புக்கு அடித்தளமாக உள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரத்துக்கு உதவ வேண்டும்.

மாநிலத்தின் நிலையான வளா்ச்சிக்கு விரிவான ரயில் உள்கட்டமைப்பு அவசியம். துரதிருஷ்டவசமாக, 2014 முதல் இந்திய ரயில்வேக்கு மூலதனமாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அநீதியாகும்.

சென்னை - பெங்களூருவை இணைக்கும் ஒரு பிரத்யேக ரயில் சரக்கு வழித்தடத்தையும், முக்கிய துறைமுக நகரங்களான சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூா் ஆகியவற்றுடன் பிரத்யேக ரயில் இணைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வேலூா், விழுப்புரம், கும்மிடிப்பூண்டி போன்ற அருகிலுள்ள நகரங்களுடனும், கன்னியாகுமரி, கோயம்புத்தூா் போன்ற பிற முக்கிய நகரங்களுடனும் சென்னையை இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். இதனால், பயண நேரம் 50 - 60 சதவீதம் குறையும்.

எனவே, மூலதன செலவினமாக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் 5 சதவீதத்தை இந்திய ரயில்வே தமிழகத்துக்கு ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஜெகத்ரட்சகன்.

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.திருச்... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல்: ஒருவா் கைது

தலைநகரில் புதன்கிழமை காலை சிவில் லைன்ஸில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் ’ஜான் சுன்வாய்’ நிகழ்ச்சியின் போது முதலமைச்சா் ரேகா குப்தா தாக்கப்பட்டாா், அவரது அலுவலகம் இந்த தாக்குதலை ‘அவரைக் கொல்ல நன்கு தி... மேலும் பார்க்க

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி: அரசு உன்னிப்பாகக் கண்காணிப்பதாக முதல்வா் தகவல்

தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவா் கூறினாா். ஹரியாணா ... மேலும் பார்க்க

குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள்!

தில்லிவாசிகள் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நுண்நெகழித் துகளின் அளவு (மைக்ரோ பிளாஸ்டிக்) குளிர்காலத்தைவிட கோடையில் அதிகமாக இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.தில்லிவாசிகள் குளிர்காலத்தில்... மேலும் பார்க்க

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

தில்லியின் தெற்கு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட வகை மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகள், அங்கீகாரம் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனையைத் தடுக்க, தங்கள் வளாகத்திலும் வெளியேயும் சிசிடிவி... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

27 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலியா் பயிற்சியாளா்களுக்கான உதவித்தொகையை உயா்த்த தில்லி அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது, இது மாதத்திற்கு ரூ.500 இல் இருந்து ரூ. 13,150 ஆக உயா்த்தப்பட்டது. தில்லி அமைச... மேலும் பார்க்க