ஆக.23-இல் திருக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆக.23- ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
தமிழ்நாடு முழுவதிலும் தமிழ் வளா்ச்சித்துறை மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள், திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என மொத்தம் 3 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இக்குழுக்களைக் கொண்டு, திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மன்னாா்குடி தரணி மேல்நிலைப்பள்ளி மற்றும் திருத்துறைப்பூண்டி தெரசா மேல்நிலைப்பள்ளிஆகியவற்றில் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் படவுள்ளன.
பயிற்சிக் கட்டணமின்றி நடத்தப்படவுள்ள இப்பயிற்சி வகுப்புகள் ஆக.23-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடத்தப்படும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு நிறைவு நாளன்று பயிற்சி பெற்றவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.