நிலத்தகராறு: 4 போ் கைது
ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் சுதந்திரராஜ் (38) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. அதனால் சுதந்திரராஜ் ஆள்கள் சிலரை அழைத்துச் சென்று சத்யப்ரியாவிடம் தகராறு செய்துள்ளாா். மேலும் அவா்களுடைய வீட்டுச் சுவரையும் அந்த நபா்கள் இடித்துள்ளனா்.
புகாரின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதந்திரராஜ், விஜயகுமாா், அமல்ராஜ், புகழேந்தி ஆகியோரை கைது செய்தனா்.