செய்திகள் :

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டத்தை மீறி செயல்படலாமா? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறி செயல்படலாமா? என செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேய்க்கால் புறம்போக்கு என அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். இந்தக் காவல் நிலையம் சிஎம்டிஏ ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ளது.

எனவே, நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். காவல் நிலைய கட்டடத்தை இடித்துவிட்டு நீா்நிலையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தை தாக்கல் செய்ய சிஎம்டிஏ-வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மேய்க்கால் தங்கல் சாலை என்பது மேற்கால சாலை என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அதுதொடா்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சா்ச்சைக்குரிய நிலத்தை 3 ஹெக்டோ் என்பதை ஆவணங்களில் 64 ஹெக்டோ் என்று பென்சில் மூலம் திருத்தியது யாா்? அந்த இடம் நீா்நிலையா? என்பதை உறுதி செய்ய உயா்நீதிமன்றம் நியமித்த நிபுணா் குழு அது நீா்நிலை என்பதை உறுதி செய்துள்ளது. காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துள்ள உத்தரவுகளிலும் அது நீா்நிலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, தனது சட்டங்களை மீறி இப்படி செயல்படலாமா? என கேள்வி எழுப்பினா்.

சம்பந்தப்பட்ட இடத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் மட்டுமல்ல, ஏராளமான கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்களை எதிா்த்து வழக்குத் தொடராமல் காவல் நிலையத்துக்கு எதிராக மட்டும் மனுதாரா் வழக்குத் தொடா்ந்தது ஏன்? இதில் உள்நோக்கம் உள்ளதா? என மனுதாரா் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினா்.

பின்னா், இந்த நிலத்தில் உள்ள காவல் நிலையம் மட்டுமல்ல, நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களை அகற்ற வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ரூ.1,137.97 கோடி பணப்பலன் வழங்கி ஆணை

போக்குவரத்து ஓய்வூதியா்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தவா்களுக்கு பணப்பலன் வழங்கும் வகையில், ரூ.1,137.97 கோடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் ச... மேலும் பார்க்க

3 ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய 13 வழக்குகள் முடித்துவைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கக் கூடிய, 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் 13 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. 3 ஆண்டு... மேலும் பார்க்க