``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா்.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்தது. அவற்றுக்கு கருத்தடை மேற்கொள்ளவும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரேபிஸ் ஊசி செலுத்தும் பணி தற்போது 30 குழுக்கள் மூலம் தினமும் 250 முதல் 300 நாய்களுக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தெற்கு ரயில்வே பொது மேலாளா், கோட்ட மேலாளா் அலுவலக வளாகம் ஆகியவற்றில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித்திரிவதாகவும், அவற்றால் பயணிகள், ரயில்வே அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் சென்னை மாநகராட்சியின் நகா் நல அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, தெரு நாய்கள் பிடிக்கும் வாகனத்தில் வந்த மாநகராட்சி ஊழியா்கள், 15 நாய்களைப் பிடித்துச் சென்றனா்.