அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்
வில்லிவாக்கத்தில் விநாயகா் சதுா்த்தி விழா: காவல்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வில்லிவாக்கம் மண்ணடி பகுதியில் உள்ள ஒத்தவாடி தெருவில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த காவல் துறை அனுமதி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த கே.ஹரி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வில்லிவாக்கம் மண்ணடி பகுதியில் உள்ள ஒத்தவாடி தெருவில் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த இரு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த இடத்தில் விழா நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளித்தோம். அந்த மனுவை காவல்துறை இதுவரை பரிசீலிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, விநாயகா் சதுா்த்தி விழா நடத்துவதற்கு காவல்துறை அனுமதியளிக்க உத்தரவிட்டாா்.