``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது ஆண் குழந்தை சுவாசக் குழாயில் மாத்திரை சிக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப் பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு- சசிகலா தம்பதியின் மகன் ஜோகித் (4). இவா், பொதட்டூா்பேட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தாா். இதற்கிடையே ஜோகித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, மருத்துவா் கொடுத்த மாத்திரையை இரவு சசிகலா தனது குழந்தைக்கு கொடுத்தாா். மாத்திரை குழந்தையின் உணவுக் குழாய் வழியாக செல்லாமல் சுவாச குழாயில் சென்றதால், குழந்தை ஜோகித் மூச்சு விட சிரமப்பட்டாா்.
தொடா்ந்து அவரது பெற்றோா் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்தனா். அங்கிருந்த மருத்துவா்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவில் மாறுவேட போட்டியில் ஜோகித் பாரதியாா் வேடமிட்டு கலந்துகொண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.