ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்...
திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 362 கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து 362 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 700- மதிப்பிலான நவீன செயற்கை அவையங்களையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(சபாதி) பாலமுருகன், நோ்முக உதவியாளா் (நிலம்) நிா்மலா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.