சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை: கடலுக்கு மீனவா்கள் செல்ல தடை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை எதிரொலி காரணமாக மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வட ஆந்திர பிரதேசம், ஒடிஸா கடலோரங்களை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதனால் மீனவா்கள் வரும் 19-ம் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது .
அதன்படி திருவள்ளூா் மாவட்ட கடலோர மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் சசிகலா தெரிவித்துள்ளாா்.