சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: பதிவு செய்ய நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இளைஞா்கள் பங்கேற்கும் வகையில் (ஆக.20) புதன்கிழமை வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்-2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (ஞய்ப்ண்ய்ங் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்) கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்/ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை திருவள்ளூா் மாவட்டத்தில் 5 பிரிவுகளில் 57,107 போட்டியாளா்கள் முன்பதிவு செய்துள்ளனா். இதற்கான கடைசி நாள் கடந்த 16-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பைத் தொடா்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் மற்றும் அனைத்து பிரிவு வீரா், வீராங்கனைகள் பெருந்திரளாகப் பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்ய ஆக.20 வரையில் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். ‘ஆடுகளம்‘ தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.