செய்திகள் :

மூன்றே போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்த `பேபி ஏபி' பிரேவிஸ்; எப்படி சாத்தியமானது?

post image

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெவால்ட் பிரேவிஸின் (125) அதிரடி சதத்தால் 218 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா, 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த நிலையில், டி20 தொடரின் வெற்றியாளர் யார் என்பதை நிரூபிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49 ரன்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், பிரேவிஸ் 26 ரன்களில் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 172-ஆக உயரப் பங்காற்றினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்டுகள் விழுந்தால் மெக்ஸ்வெல்லின் அதிரடி அரைதத்தால் (62 ரன்கள்), ஒரு பந்தை மிச்சம் வைத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

மூன்று போட்டிகளையும் சேர்த்து 150 ரன்கள் குவித்த டிம் டேவிட் தொடர் நாயகன் விருதை வென்றார்.

அதேசமயம், இத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 180 ரன்களுடம் முதலிடம் பிடித்த பிரேவிஸ், ஆஸ்திரேலியாவுக்கெதிராக அதன் சொந்த மண்ணில் அதிக டி20 சிக்ஸ் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

Virat Kohli
விராட் கோலி

இதுவரை ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கெதிரான அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 12 சிக்ஸுடன் (10 போட்டிகளில்) விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்.

இவ்வாறிருக்க, இந்தத் தொடரில் முதல் சிக்ஸ் எதுவும் அடிக்காமல் 2 ரன்னில் அவுட்டான பிரேவிஸ், இரண்டாவது போட்டியில் 8 சிக்ஸும், மூன்றாவது போட்டியில் 6 சிக்ஸும் அடித்து கோலியை இரண்டாமிடத்துக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார்.

பிரேவிஸ் கடந்த ஐ.பி.எல் சீசனில் பாதியில் சி.எஸ்.கே (CSK) அணியில் இணைந்து அதிரடியாக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gill: "அந்த 200 ரன்களுக்காக..." - நான்காவது முறை Player of the Month பெற்ற கில்

2025 ஜூலை மாதத்தின் பிளேயர் ஆஃப் தி மன்த் (Player of The Month) விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சும்பன் கில். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தியதுடன் பேட்ஸ்மேனாகவும்... மேலும் பார்க்க

Ashwin: சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறாரா? - அஷ்வின் கொடுத்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் வரை ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பின்னர் பல அணிகளுக்கு இடம் மா... மேலும் பார்க்க

IPL: "சஞ்சு சாம்சன் வெளியேறினால் ரியான் பராக்தான் அதற்குக் காரணம்" - முன்னாள் சிஎஸ்கே வீரர்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கூறியிருப்பதாகச் சமீப நாள்களாகப் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.இதைவிட முக்கியமாக, சஞ்சு சாம்சன் சிஎஸ்... மேலும் பார்க்க

"கவாஸ்கரும், டெண்டுல்கரும் அப்படி நினைத்திருந்தால்..." - உத்வேகம் தரும் சர்பராஸ் கான்

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டும், இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாகப் போராடிவரும் இளம் வீரர் சர்பராஸ் கான்.கடந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந... மேலும் பார்க்க

Sanju Samson: 'நடந்தால் பார்ப்போம்' - சிஎஸ்கேவில் இணைகிறீர்களா? சஞ்சு சாம்சன் அளித்த பதில் என்ன?

சிஎஸ்கே அணியில் இணைவது தொடர்பாக சஞ்சு சாம்சன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை, 306 டி20 போட்டிகளில் விளையாடி ... மேலும் பார்க்க

'ராஜஸ்தான் அணி என்னுடைய உலகம்; கடவுள் என்ன வழி காட்டுகிறாரோ.!' - சஞ்சு சாம்சன் சொல்வது என்ன?

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சிஎஸ்கே அல்லது கொல்கத்தா அணிக்கு செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சஞ்சுசாம்சன் இதுதொடர்பாக ... மேலும் பார்க்க