'கூலி'-க்கு தொடக்கப் புள்ளி வைத்த அனிருத் வீட்டு ரஜினி பெயின்டிங் - அனிருத் பகிர...
'ராஜஸ்தான் அணி என்னுடைய உலகம்; கடவுள் என்ன வழி காட்டுகிறாரோ.!' - சஞ்சு சாம்சன் சொல்வது என்ன?
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சிஎஸ்கே அல்லது கொல்கத்தா அணிக்கு செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சஞ்சுசாம்சன் இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறுகிறாயா? என்று அஷ்வின் சஞ்சு சாம்சனிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த சஞ்சு சாம்சன், " எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. கடவுள் என்ன வழி காட்டுகிறாரோ அதன்படி செல்ல வேண்டியதுதான்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ராஜஸ்தான் அணி குறித்து பேசிய அவர், " ராஜஸ்தான் அணி என்னுடைய உலகம். கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த ஒரு சிறுவனின் திறமையை உலகுக்கு வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கினார்கள்.

அணி நிர்வாகம் என்னை முழுமையாக நம்பியது. ராஜஸ்தான் அணி தமது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான அணியாக இருந்தது. அங்கு நான் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்களுடனான எனது பயணம் அற்புதமானது" என்று கூறியிருக்கிறார்.