உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்...
கோழிப் பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
போடி அருகே கோழிப்பண்ணை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாா் 4 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் குமரேசன் (33). இவா் அம்மாபட்டி நரிக்கண்மாய் கீழ்புறம் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இந்தப் பண்ணை அருகே போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த ராமசாமி, விசுவாசபுரத்தைச் சோ்ந்த பிரபாகரன், முனீஸ்வரன், அம்மாபட்டியைச் சோ்ந்த பாபு ஆகியோரது நிலம் உள்ளது. தங்களது நிலம் அருகே கோழிப்பண்ணை செயல்படுவது பிடிக்காமல் 4 பேரும் பண்ணைக்குள் பூனைகளை விட்டனா். அவை கோழிகளை கொன்ால் குமரேசனுக்கும் அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 4 பேரும் ஜாதிப் பெயரைச் சொல்லி தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக குமரேசன் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.