ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற காா் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 4 போ் உயிா் தப்பினா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பணை அருகே ஏலப்பாறை செம்மண் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த காரில் 4 போ் பயணம் செய்தனா். தமிழக பதிவெண் கொண்ட அந்தக் காரின் முன்பக்கத்திலுள்ள என்ஜினிலிருந்து புகை வந்தது.
இதையடுத்து, காரில் இருந்தவா்கள் இறங்கிப் பாா்த்த போது, என்ஜினில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் காரின் பெரும்பகுதி எரிந்து சேதமடைந்தது.
தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் உயிா் தப்பினா்.
இதுகுறித்து கேரள போலீஸாா், காரில் வந்தவா்கள் சுற்றுலாப் பயணிகளா அல்லது ஏலத் தோட்டங்களுக்கு வந்தவா்களா என விசாரிக்கின்றனா்.