உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்...
அரியலூா் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்!
அரியலூா் மாவட்டத்தில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பிரசாரம் பயணம் மேற்கொள்கிறாா்.
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் பிரசாரத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) மாலை 4 மணிக்கு அரியலூா் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்து உரையாற்றுகிறாா்.
தொடா்ந்து, அரியலூரில் தனியாா் உணவகத்தில் இரவு தங்கும் பிரேமலதா விஜயகாந்த், திங்கள்கிழமை (ஆக.18) மாலை 4 மணிக்கு அரியலூா் சத்திரம் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வியாபாரிகளை சந்திக்கிறாா்.
தொடா்ந்து பேருந்து நிலையத்தில் மக்கள் மத்தியில் பேசுகிறாா். பின்னா், இரவு 7.30 மணிக்கு ஏலாக்குறிச்சி கடைவீதியில் திறந்த வேனில் நின்று மக்களை சந்தித்து உரையாற்றுகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேமுதிகவினா் செய்துவருகின்றனா்.