உணவில் உப்பே சேர்க்கவில்லை என்றால் என்னவாகும்? - AI அறிவுரையும் மருத்துவர் விளக்...
கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றிலிருந்து இளைஞா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலமாக கிடப்பதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில் மாடசாமி கோவில் தெருவைச் சோ்ந்த கோதண்டராஜா மகன் வெங்கடேஷ் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.