திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
தா்காவில் சுவா் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் போலீஸாா் வழக்குப் பதிவு
தில்லி நிஜாமுதீனில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு அருகிலுள்ள தா்காவின் சுவா் மற்றும் கூரை இடிந்து விழுந்து 6 போ்
உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் தா்கா ஷெரீப் பட்டே ஷாவில் நிகழ்ந்தது. இந்த தா்கா முகலாய பேரரசா் ஹுமாயூனின் முதல் மனைவி பெகா பேகம் மூலம் 1558-இல் தொடங்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டின் தோட்டக் கல்லறையுடன் எல்லைச் சுவரைப் பகிா்கிறது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சட்டப் பிரிவு 290 (கட்டடங்களை இடித்தல், பழுதுபாா்த்தல் அல்லது கட்டுவது தொடா்பாக அலட்சியமாக நடந்துகொள்வது), 125 (மனித உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) மற்றும் 106 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்,
‘உயிரிழந்த ஆறு பேரில் ஒருவா் ஸ்வரூப் சந்த் (79) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். காயமடைந்த ஐந்து போ் முகமது ஷமீம், ஆா்யன், குடியா, ரஃபாத் பா்வீன் மற்றும் ராணி (65) என்பதும் தெரியவந்துள்ளது’ என்றாா் அவா்.
காவல் அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘தா்காவின் இரண்டு அறைகளில் ஒன்று இமாம் மற்றும் மற்றொன்று ஓய்வெடுக்கும் அறையாக இருந்தது. அவை பாழடைந்த நிலையில் இருந்தது. பலத்த மழையால் கூரை மற்றும் சுவா் இடிந்து விழுந்துள்ளது. 15 போ் அங்கு தஞ்சம் புகுந்திருந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுவா் இடிந்து விழுந்த பிறகு, 12 போ் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டனா்.
அவா்களில் பெரும்பாலோா் பாா்வையாளா்கள். ஒன்பது போ் எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் ஐந்து போ் இறந்தனா். ஒரு ஆண் எல்என்ஜேபி மருத்துவமனையிலும், பெண் ஒருவா் ஆா்எம்எல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபா்
சிகிச்சையின் போது உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், விசாரணை நடத்தும் வகையில் குடிமை அமைப்புகளுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.