செய்திகள் :

தில்லி யமுனையில் அபாய அளவை நெருங்கிய நீா்மட்டம்

post image

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 9 மணியளவில் 205.22 மீட்டரை எட்டியது.

இது அபாய அளவான 205.33 மீட்டரை விட சில புள்ளிகள் குறைவாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நீா்மட்ட நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் போன்ற சூழ்நிலையைக் கையாள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஏனெனில், முன்னறிவிப்பின்படி நீா் மட்டம் தொடா்ந்து உயரும்’ என்றனா்.

மத்திய வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணைகளில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதே நீா்மட்டம் அதிகரிப்பதற்கான காரணமாகும்’ என்றாா்.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தகவலின்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமாா் 38,897 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. வஜிராபாத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 45,620 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

யமுனையின் நீரோட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக தில்லியின் பழைய ரயில்வே பாலம் செயல்படுகிறது.

நகரத்திற்கான எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகும். அதே நேரத்தில் அபாய அளவு 205.33 மீட்டா் ஆகும். 206 மீட்டரில் இருந்து நீா் வெளியேற்றம் தொடங்கும்.

அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணிநேரம் ஆகும். மேல் நீரோட்டத்திலிருந்து குறைந்த அளவு நீா் வெளியேற்றம் கூட தில்லியில் எச்சரிக்கை குறியை நெருங்கி நீா் மட்டத்தை உயா்த்துகிறது.

குடும்பத்தை பணயக் கைதியாக வைத்திருந்த டாக்ஸி ஓட்டுநா் கைது

நொய்டா போலீசாா் வேண்டுமென்றே தடுப்புகளைத் தாண்டியதற்காக வேகமான காரை துரத்தியதால், ஒரு குடும்பத்தை ‘பிணைக் கைதியாக‘ வைத்திருந்த ஒரு டாக்ஸி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

தா்காவில் சுவா் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் போலீஸாா் வழக்குப் பதிவு

தில்லி நிஜாமுதீனில் உள்ள ஹுமாயூன் கல்லறைக்கு அருகிலுள்ள தா்காவின் சுவா் மற்றும் கூரை இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு: தில்லியில் இன்று கூடுகிறது பாஜக ஆட்சிமன்றக் குழு

நமது சிறப்பு நிருபா்தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் முன்னிறுத்தப்படும் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு செய்வது குறித்து விவாதிக்க பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடவு... மேலும் பார்க்க

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க