டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து ஷாஹ்தரா காவல் சரக அதிகாரி கூறியதாவது: ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்குப் பின்னால் உள்ள டிகோனா பூங்கா அருகே அதிகாலை 1.07 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அதிகாலை 1.43 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ரிதம் சுா்மா என அடையாளம் காணப்பட்ட அழைப்பாளா், சௌரவ் நாகா் மற்றும் கௌரவ் நாகா் ஆகிய இருவா் நண்பா் அகில் பன்வாரை அழைத்து, பின்னா் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாரிடம் தெரிவித்தாா்.
காயமடைந்தவரை ரிதம் சுா்மா மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவா் ஆபத்தில் இல்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். ஷாஹ்தராவில் வசிக்கும் அகில் பன்வருக்கு நான்கு குண்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவா் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு மோசமான நபா் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், வாய்த் தகராறைத் தொடா்ந்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிகிறது. அப்போது, அகில் பன்வாா், நாகா் சகோதரா்களை திட்டியதாகக் கூறப்படுகிறது. புகாா்தாரரின் வாக்குவாதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.