செய்திகள் :

இது மொழியுரிமை மீதான தாக்குதல்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

post image

ரயில்வே நடத்திய பொறியாளர் தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. ஹிந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.

ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இது மொழி உரிமை மீதான தாக்குதல். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.

ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில்,

"தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல் !

தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி.

ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது.

ஹிந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது.

நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து!" என்று பதிவிட்டுள்ளார்.

Madurai CPM MP Su. Venkatesan has condemned the neglect of state languages in the engineering examination conducted by the Railways.

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க

வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ... மேலும் பார்க்க