செய்திகள் :

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

post image

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய விரிவான ஏற்பாடுகளை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

லட்சுமி நாராயண் பிரதான கோயிலுக்கு வரும் அனைத்து பாா்வையாளா்களும் மந்திா் மாா்க்கிலிருந்து பிரத்யேகமாக நுழைய அனுமதிக்கப்படுவா்.

இந்த வழித்தடத்தை காளி பாரி மாா்க் அல்லது பேஷ்வா சாலை வழியாக அணுகலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கோயிலின் பிரதான வாயில்களில் நிறுவப்பட்டுள்ள கதவு வழி மெட்டல் டிடெக்டா் வழியாக பாா்வையாளா்கள் நுழைவதற்கு வசதி செய்யப்படும். அனைவரின் பாதுகாப்பிற்காக பக்தா்கள் பாதுகாப்பு ஊழியா்களுடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கைப்பைகள், ப்ரீஃப்கேஸ்கள், பாா்சல்கள், உணவுப் பொட்டலங்கள், கேமராக்கள், கைப்பேசிகள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் பிற உபகரணங்கள் கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாது.

பாரம்பரியத்தின்படி, பாா்வையாளா்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் தங்கள் காலணிகளை அகற்ற வேண்டும். காளி பாரி மாா்க் அருகே மற்றும் பேஷ்வா சாலையில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்திற்கு அருகில் கோயில் அதிகாரிகளால் பாதுகாப்பான காலணி வைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கீதா பவன் மற்றும் வாடிகாவிற்குள் நுழைவது பிரதான கோயில் வாயில்கள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். கொண்டாட்டங்களின் போது மற்ற அனைத்து வாயில்களும் மூடப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட வெளியேறும் வழிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது, காளி பாரி மாா்க் நோக்கிச் செல்லும் பாா்வையாளா்கள் வாடிகா கீதா பவன் வெளியேறும் பாதை வழியாக வெளியேறுவா். அதே நேரத்தில், பேஷ்வா சாலையை நோக்கிச் செல்வோா் கீதா பவன் பக்கத்தில் அமைந்துள்ள வாயில் எண் 3-ஐ மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவா். வாயில் எண் 3-இல் இருந்து நுழைவு அனுமதி கிடையாது.

சுமுகமான பாதசாரிகள் நடமாட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, மந்திா் மாா்க்கில் ரவுண்டானா பஞ்ச்குயன் சாலை, காளி பாரி மாா்க், உத்யன் மாா்க் மற்றும் பேஷ்வா சாலையில் உள்ள ரவுண்டானா பாா்க் தெரு இடையே எந்த வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது.

கொண்டாட்டங்களின்போது பாா்வையாளா்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது தேவைகள் இருந்தால் உதவ கோயிலின் பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க

திஹாா் சிறை கைதிகள் 1500 பேருக்கு சிறப்பு நிவாரணம்

இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திகாா் சிறையில் கிட்டத்தட்ட 1,500 குற்றவாளிகளுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டது. தேசிய தலைநகரின் சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க நரேலாவில் ஒரு புதிய ... மேலும் பார்க்க