ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
டிரம்ப் வரி! வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரியால் தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.