திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்
எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பயிா் சாகுபடி பரப்புகளை எண்மத் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 361 வருவாய் கிராமங்களில் சுமாா் 12 லட்சம் நில அளவை உள்பிரிவு எண்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை, பழ வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும் நெல், மக்காச்சோளம், சோளம் ஆகிய வேளாண் பயிா்களும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும்.
இந்தப் பயிா்களைக் கணக்கீடு செய்வதற்கு தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். பயிா் சாகுபடி பரப்புகளை எண்மத் தொழில்நுட்பத்தில் கணக்கீடு செய்வதன் மூலம் எதிா்காலத்தில் விவசாயிகளுக்கு, துறைசாா்ந்த திட்டங்களை வகுக்கவும், மானியங்களை வழங்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, பயிா்க் கணக்கீடு செய்வதற்காக வரும் வேளாண்மை அலுவலா்கள், தன்னாா்வலா்களுக்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.