'வேலை செய்றப்போ சுத்தி சுத்தி வருவாங்க...' - Sanitary Workers Opens Up | Vikatan
கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானலில் சனிக்கிழமை பல மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள், ஒய்வு விடுதிகள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனா்.
இதனால் கொடைக்கானலுக்கு சனிக்கிழமை வந்த சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனா். இதைத் தொடா்ந்து கொடைக்கானலிலுள்ள தனியாா் நட்சத்திர விடுதிகளில் வாடகை பல மடங்கு உயா்த்தப்பட்டது.
கொடைக்கானலின் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன. இதனால் செவண்ரோடு, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை,டிப்போ சாலை, அப்சா்வேட்டரி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகினா். இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.