செய்திகள் :

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

post image

மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி வயர் இணையதளம் முடக்கம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ஆயுதப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக கட்டுரை வெளியிட்ட ‘தி வயர்’ இணையதளம் கடந்த மே 9 ஆம் தேதி முடக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ‘தி வயர்’ ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான சித்தார்த் வரதராஜன் மீது அசாம் காவல் துறை வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தது. இந்த வழக்கில் சித்தார்த் வரதராஜனுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருந்தது.

இது தொடர்பாக சித்தார்த் வரதராஜன், மற்றொரு பத்திரிகையாளர் கரண் தாப்பர் இருவருக்கும் குவாஹாட்டி குற்றவியல் காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு, மோரிகன் மாவட்ட போலீஸார் பிஎன்எஸ் பிரிவு 152 கீழ், இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகளில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

அதே நாளில் இந்த வழக்கில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆஜராகுமாறு குவாஹாட்டி காவல் நிலையம் இருவருக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மூத்த பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தி வயரின் மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் இருவருக்கும் அசாம் மாநில காவல் துறை சம்மன் அனுப்பியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற பாதுகாப்பு வழங்கியிருந்தும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் விவரங்கள், முதல் தகவல் அறிக்கையின் நகல் எதுவும் விவரமாக குறிப்பிடாமல் கைது செய்யப்படும் என மிரட்டல் விடப்படுகிறது.

ரத்துசெய்யப்பட்ட தேச துரோக சட்டத்திற்கு மாற்றாகப் பிஎன்எஸ் பிரிவு 152-ன் கீழ், பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கப்படுகிறது.

கேள்வி கேட்பதை தேச துரோகமாகக் கருதினால், ஜனநாயகம் இருக்காது” எனப் பதிவிட்டுள்ளார்.

Guwahati Police Summon 'The Wire' Journalist Karan Thapar After Editor Varadarajan in Sedition FIR

இதையும் படிக்க : தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், த... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறை... மேலும் பார்க்க

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது ... மேலும் பார்க்க