செய்திகள் :

ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் தெரியுமா?

post image

ஸ்வீடனின் ஆர்க்டிக் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கிறூனா தேவாலயம், தரை இடிவு (landslide) மற்றும் நிலத்தடி இரும்புத்தாது சுரங்க விரிவாக்கத்தால் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது.

600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள் பழமையான இந்த மரக் கட்டடம், சிறப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய கிறூனா நகர மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பயணம் இரண்டு நாட்கள் என திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க நிறுவனம் எல்கேஏபி (LKAB) இதற்காக கடந்த ஒரு வருடமாக சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

AP

இந்த தேவாலயம், ஸ்வீடனின் மிகப்பெரிய மரக் கட்டடங்களில் ஒன்றாகவும், மிக அழகான கட்டடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதுவரை இருந்த இடத்தை விட்டு தேவாலயம் நகர்த்தப்படுவதால், மக்களிடையே கலவையான உணர்வுகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

AP

இந்த தேவாலயம் மட்டுமல்லாமல் மொத்தம் 3,000 வீடுகள் மற்றும் பல பொதுக் கட்டங்கள் புதிய நகர மையத்திற்கு மாற்றப்படுகின்றன. சில கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகின்றன. சில கட்டடங்கள் தேவாலயம் போல முழுமையாக மாற்றப்படுகின்றன.

ஐரோப்பாவின் இரும்புத்தாதுவில் 80% உற்பத்தி செய்யும் எல்கேஏபி நிறுவனம், இந்த நகர மாற்றத்தால் சுரங்கத்தை பல தசாப்தங்கள் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான்: புலிகள் வாழும் காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – சவாரி வாகனம் பழுதடைந்ததால் பரபரப்பு!

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரப... மேலும் பார்க்க

சென்னை: வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பிட்புல் நாய் கடித்ததால் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சென்னையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெருவில் நடந்த துயரச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற... மேலும் பார்க்க

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.Pearl... மேலும் பார்க்க

யூடியூபரின் இறப்புக்கு நீதிகேட்டு போராடும் மேற்கு ஆப்பிரிக்க நாடு - யார் இவர், என்ன காரணம்?

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினா ஃபாசோவை சேர்ந்த, அலினோ ஃபாசோ. ஜனவரி 2025-ல் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அபிஜான் நகரில் உள்ள ராண... மேலும் பார்க்க

புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது. அறிவிப்புப் பலகைஅதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக... மேலும் பார்க்க

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இ... மேலும் பார்க்க