தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!
தில்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் ஜுபைர், குல்சாகர் மற்றும் தௌபிக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட குடிமை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.