போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்...
கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சன் நெட்வொர்க் சாா்பில் எம்.ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சா்ஸ் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘கூலி’ திரைப்படத்தை விட கேஜிஎஃப் உள்ளிட்ட பிற திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன், மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன் விசாரணக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிறோம் என்று தெரிவித்தபோது, அதனை ஏற்றுக் கொண்டு, தற்போது வழக்கு தொடுத்துள்ளதாகவும், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , மனுவுக்கு பதிலளிக்கும்படிதணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 25-க்கு உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!