அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
மதுரையில் சட்டவிரோத பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!
மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்றி, தகவல் தெரிவிக்க, மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினர் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்றி, தகவல் தெரிவிக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மதுரையில் உள்ள அனைத்து பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்களை ஆய்வு செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், ஒத்துழைக்க அரசு தயாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க: கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?