‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயணி டாம் ஸ்டூக்கர்?
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் பயன்படுத்தி 2.4 கோடி மைல்கள் பயணித்து ஒரு அசாதாரண சாதனையைப் படைத்துள்ளார்.
ஆரம்பத்தில், விமான பயணத்திற்குப் பயந்த இவருக்கு அதனைத் தணிக்கப் பிரார்த்தனையும், மது பானமும் உதவியாக இருந்துள்ளன. வேலைக்காகத் தொடர்ந்து பயணித்ததையடுத்து அவரது பயம் படிப்படியாகக் குறைந்ததுள்ளது.

2.38 கோடி ரூபாய்க்கு வாழ்நாள் விமான பயணம்
1990-ஆம் ஆண்டு, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஒரு அற்புதமான சலுகையை அறிவித்திருக்கிறது. வாழ்நாள் முழுவதற்குமான முதல் வகுப்பு பயண அனுமதி $290,000 (இன்றைய மதிப்பில் சுமார் 2.38 கோடி ரூபாய்) என அறிவித்திருக்கிறது. இந்தச் சலுகை உலகம் முழுவதும் முதல் வகுப்பில் வரம்பற்ற பயணத்தை அனுமதித்தது.
டாம் ஸ்டூக்கர் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு, யுனைடெட் ஏர்லைன்ஸில் 10 மில்லியன் மைல்களைப் பயணித்த முதல் பயணியாக அவர் மாறினார். இந்த மைல்கல்லை ஏர்லைன்ஸ் பெருமையுடன் கொண்டாடியது. 2018-ஆம் ஆண்டு, அவர் 20 மில்லியன் மைல்களை எட்டினார். 2024 மே மாதத்தில், 24 மில்லியன் மைல்களை கடந்தார்.
இதுவரை, டாம் 12,000-க்கும் மேற்பட்ட விமான பயணங்களை மேற்கொண்டு, 100-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பார்வையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாம் அடிக்கடி பயணிப்பவர் மட்டுமல்ல, ஏர்லைன்ஸின் பிராண்ட் தூதராகவும் மாறியிருக்கிறார். யுனைடெட் ஏர்லைன்ஸ் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இரண்டு விமானங்களுக்கு அவரது பெயரைச் சூட்டியதாகக் கூறப்படுகிறது.

அவர் எப்போதும் முதல் வகுப்பில் முன் வரிசை இருக்கை 1B-ஐ தேர்ந்தெடுப்பாராம். அதை அவர் தனது ‘இரண்டாவது வீடு’ என்று அழைக்கிறார்.
டாம் ஸ்டூக்கரின் இந்தப் பயணம், 2009-ஆம் ஆண்டு வெளியான அப் இன் தி ஏர் என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்கு உத்வேகமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.